இலங்கை - ஆப்கானிஸ்தான் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி இதுதான்!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (13:07 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்ற நிலையில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது
 
இதனை அடுத்து 145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 148 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
 
இலங்கை அணியின் டி சில்வா 66 ரன்கள் எடுத்து ஆட்டம் நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி தற்போது குரூப்-1 பிரிவில் 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அந்த அணி முதலிடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்