அயர்லாந்தை எளிதாக வீழ்த்தி 2-ம் இடத்துக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா

திங்கள், 31 அக்டோபர் 2022 (19:42 IST)
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 
 
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் அடித்தது. இதனை 180 என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து விளையாடிய நிலையில் 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் குரூப் 1 பிரிவில் தற்போது ஆஸ்திரேலிய அணி ஐந்து புள்ளிகளுடன் நியூசிலாந்துக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
3 புள்ளிகளுடன் அயர்லாந்து அணி 4-வது இடத்தில் உள்ளதால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்