தலைசிறந்த பேட்ஸ்மேன் என நிரூபித்த ஸ்மித் ..கோலியின் சாதனையை முறியடித்தாரா ?

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (19:57 IST)
உலக கோப்பையில் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம், வலுவான ஆஸ்திரேலிய அணி தோற்றது. இந்நிலையில் தற்போது இரு நாடுகளிடையே ஆஸஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்   இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்த ஆஸ்த்திரேலிய வீரர் ஸ்மித், தான் ஒரு சிறந்த வீரர் என்பதை நிரூபித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ஸ்மித்துக்கு, ஓராண்டு காலம் விளையாட தடைவிதிக்கப்பட்டது.  இந்த தடை முடிந்ததை அடுத்து தற்போது இங்கிலாந்துகு எதிராக டெஸ்ட் போட்டியில் இவர் பங்கேற்று விளையாடினார்.
 
இதில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்து தன் திறமையை மீண்டும் நிரூபித்தார். இந்நிலையில் உலகில் தலைசிறந்த பேட்ஸ் மேன்களாக  ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித், இந்திய வீரர் கோலி, ஜோரூட்ம் வில்லியம்சன் ஆகியோர் உள்ளனர். 
 
இதில் 118 இன்னிங்ஸில் விளையாடியுள்ள  ஸ்மித், 25 சதங்களுடன்  6343 ரன்கள் அடித்துள்ளார்.  விராட் கோலி 25 சதங்களுடன் 5994 ரன்கள் சேர்த்துள்ளனர்.ஜோரூட் 16 நடிகைகளுடன் 5643 ரன்கள் அடித்துள்ளார்.
 
மேலும் வில்லியம்சன் 20 சதங்களுடன் 5483 ரன்களும் அடித்துள்ளார். இந்நிலையில்  நம் இந்திய வீரரான  கோலியை விட  ஸ்மித் ஒரு வருடம் விளையாடாமல் இருந்தாலும் அதிக ரன்கள் அடித்தவர்களில் அவரே முதலிடம் பிடித்துள்ளார்  என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்