மாற்றுத்திறனாளி மற்றும் திருநங்கைகளுக்கான இலவச ஆடை வடிவமைப்பு பயிற்சி முகாம்

செவ்வாய், 16 ஜூலை 2019 (17:12 IST)
சென்னையில் தமீன் என்டர்டெய்ன்மென்ட் (Dhiman entertainments) அமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளி மற்றும் திருநங்கைகளுக்கான இலவச ஆடை வடிவமைப்பு பயிற்சி முகாம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அமைப்பு ஒன்றின் சார்பாக
மாற்றுத்திறனாளி மற்றும் திருநங்கைகளுக்கான இலவச ஆடை வடிவமைப்பு மற்றும் மாடலிங் வகுப்புகள் தொடங்கப்பட்டது.
 
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிகழ்ச்சி ஒருகினைபாளர் ஷோபனா கூறியதாவது:
 
ஏற்கனவே 10 மாற்றுத்திறனாளிகள், 10 கண் பார்வையற்றவர்கள் உட்பட 357 ஆடை வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்ட தொடர் இருபத்தி எட்டு மணி நேர சிறப்பு நிகழ்ச்சி நடத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளோம். எனவே இதுபோன்ற மாடலிங் களில் ஈடுபடும் மாற்றுத் திறனாளிகள தவறான பாதையில் சென்று விடக் கூடாது என்பதற்காகவும் சரியான தீர்வாக அமைய வேண்டும் என்பதற்காக எங்கள் அமைப்பு பாடுபடுகிறது அதற்காக இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது இது முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்