டி 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி துறந்துள்ளார்.
உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெறாத இந்திய அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ரசிகர்களிடம் மட்டும் இல்லாமல் முன்னாள் வீரர்களே விமர்சனங்களை வைக்க ஆரம்பித்துள்ளனர். தொடருக்கு முன்னதாகவே விராட் கோலி கேப்டன் பொறுப்பை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து இப்போது நியுசிலாந்து தொடருக்கு கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கோலியின் எதிர்காலம் குறித்து பேசியுள்ளார். அதில் கோலி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பை விட்டும் விலக வேண்டும். கேப்டனாக இருந்து கொண்டு பேட்டிங்கில் கவனம் செலுத்துவது எளிதல்ல. அதுவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்காக விளையாடும்போது. எனக் கூறியுள்ளார்.