பென் ஸ்டோக்ஸ் அபார சதம்: 196 இலக்கை எளிதில் எட்டிய ராஜஸ்தான்

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (07:20 IST)
பென் ஸ்டோக்ஸ் அபார சதம்: 196 இலக்கை எளிதில் எட்டிய ராஜஸ்தான்
நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நாற்பத்தி ஐந்தாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மிக அபாரமாக வென்றது
 
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ஹர்திக் பாண்ட்யாவின் அபார ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. அபுதாபியில் மைதானத்தில் 196 என்பது இமாலய இலக்கு என்று கருதப்பட்டது. ஆனால் பென் ஸ்டோக்ஸ் அபார சதம் அடித்தார். அவர் அடித்த 107 ரன்கள் காரணமாக ராஜஸ்தான் அணி 18.2 ஓவர்களிலேயே 196 என்ற இலக்கை எட்டி வெற்றிபெற்றது. சஞ்சு சாம்சன் அவருக்கு துணை நின்று 54 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் மிக அபாரமாக சதமடித்த பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணியின் ஆறாவது இடத்திற்கு முன்னேறியது என்பதும் மீண்டும் சிஎஸ்கே எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்