145 ரன்களுக்கு பெங்களூரை கட்டுப்படுத்திய சென்னை: இன்று வெற்றி கிடைக்குமா?

ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (17:09 IST)
145 ரன்களுக்கு பெங்களூரை கட்டுப்படுத்திய சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை 145 இழந்து ரன்கள் எடுத்துள்ளது. 
 
பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி 50 ரன்களும், டிவில்லியர்ஸ் 39 ரன்களும், எடுத்துள்ளனர்.. சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்களான சாம் கர்ரன்  3 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் இரண்டு விக்கெட்டுக்களையும் சாண்ட்னர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
 
இந்த நிலையில் 146 என்ற இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி பேட்டிங் செய்ய உள்ளது. இளையதலைமுறை வீரர்களான கெய்க்வாட், ஜெகதீசன் இன்று நன்றாக விளையாடி அணிக்கு வெற்றி தேடி தந்தால், அவர்களது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்த அரிய வாய்ப்பை அவர்கள் இருவரும் பயன்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்