900 கோல்கள்… கால்பந்து உலகில் யாரும் படைக்காத சாதனையை தொட்ட ரொனால்டோ!

vinoth
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (09:35 IST)
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்.  கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலமாகியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள் கொண்ட விளையாட்டு வீரர் என்ற சாதனையை அவரிடம்தான் உள்ளது.

கிளப் போட்டிகளில் கிட்டத்தட்ட அனைத்துக் கோப்பைகளையும் வென்றுவிட்டாலும், இன்னும் ரொனால்டோ கால்பந்து உலகக் கோப்பையை தனது அணிக்காக வெல்லவில்லை. தற்போது 38 வயதாகும் ரொனால்டோ தனது ஓய்வு குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். அதில் “இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் கால்பந்தில் இருந்து ஓய்வுபெற்றுவிடுவேன். ஓய்வு பெற்ற பிறகு கால்பந்து க்ளப் ஒன்றை வாங்கும் எண்ணம் உள்ளது. பயிற்சியாளராக ஆகும் எண்ணம் இல்லை” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் தன் கால்பந்து வாழ்க்கையில் 900 கோல்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதுவரை கால்பந்து உலகில் யாருமே இந்த சாதனையைப் படைத்ததில்லை. நேற்று நேஷனல் லீக் தொடரில் குரேஷியாவுக்கு எதிரான போட்டியில் அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்