இந்திய டெஸ்ட் அணிக்குக் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமனம்…. ரஹானேவுக்கு இடம் இல்லை!

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (16:35 IST)
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை கடந்த ஜனவரி மாதம் விராட் கோலி ராஜினாமா செய்தார். இதற்கு அவருக்கு பிசிசிஐக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளே காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட போவது யார் என்று கேள்வி எழுந்தது.

இந்நிலையில் விரைவில் வர உள்ள இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ரோஹித் ஷர்மா தலைமை தாங்குவார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  மோசமான ஃபார்மில் இருக்கும் அஜிங்க்யே ரஹானே மற்றும் சித்தேஸ்வேர் புஜாரா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ரோஹித் சர்மா இந்திய அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்