ஐபிஎல் ஏலம் வீரர்களைக் கால்நடைப் போல நடத்துகிறது… சென்னை வீரர் அதிருப்தி!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (10:09 IST)
ஐபிஎல் அணிகளுக்காக வீரர்கள் ஒதுக்கப்படும் நடைமுறை வீரர்களை ஒரு பண்டம் போல நடத்துவதாக ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரிமீயர் லீக் தொடர் வெற்றிகரமாக 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதுவரை 8 அணிகள் மட்டுமே கலந்துகொண்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முதல் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான மெகா ஏலம் கடந்த வாரம் பெங்களூருவில் நடந்தது. அதில் கலந்துகொண்ட 500க்கும் மேற்பட்ட வீரர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை. நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா கூட ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

இந்த ஏலமுறை பற்றி தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள ராபின் உத்தப்பா. இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது ‘ஏலம் எப்போதோ எழுதிய பரீட்சையின் முடிவுகளுக்காக காத்திருப்பது போன்று இருக்கிறது. உண்மையில் வீரர்கள் ஒரு கால்நடையைப் போல நடத்தப்படுவதாக உணர்கிறேன். இது மகிழ்ச்சியான் உணர்வை அளிக்கவில்லை. நம்மை ஒரு நுகர்பொருளாக்கி நம்மைப் பற்றிய கருத்தை வெளியிடுகிறார்கள். ஏலத்தில் விற்கப்படாதவர்கள் வாழ்க்கையில் என்ன சந்திக்கிறார்கள் என்பதை பற்றி நான் சிந்திக்கிறேன். ’ எனக் கூறியுள்ளார். மேலும் அவர் வீரர்கள் வேறு ஒரு நாகரீகமான முறையில் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என்றும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்