சிம்புவை நம்பி நடிக்க ஒத்துக்கிட்டது தப்போ? கௌதம் கார்த்திக் புலம்பல்!

செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (09:35 IST)
நடிகர் கௌதம் கார்த்திக் சிம்புவோடு இணைந்து பத்து தல படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாகி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது.

இப்போது சில பல மாற்றங்களோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு சிம்பு இல்லாத மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. சிம்புவுக்காக படக்குழு காத்திருக்கிறது. ஆனால் அவர் இன்னும் வந்தபாடில்லை. இதனால் இந்த படத்தின் கதாநாயகனான கௌதம் கார்த்திக் தான் ஒத்துக்கொண்ட வேறு படங்களில் நடிக்க சென்றுவிடலாமா என்ற யோசனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்