2019 உலககோப்பை; தோனி, யுவராஜ் தேவையா?: ரவி சாஸ்திரி பேட்டி!!

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2017 (17:28 IST)
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் தோனி, யுவராஜ் சிங் பற்றி பேசியுள்ளார்.


 
 
ரவி சாஸ்திரி 2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் உலககோப்பை போட்டி வரை பயிற்சியாளர் பதவி வகிப்பார் என தெரிகிறது.
 
இந்நிலையில் ரவி சாஸ்திரி பேட்டி ஒன்று அளித்துள்ளார். அவர் கூறியதாவது, கடந்த 12 மாதங்களாக என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. நான் எனது பணியை புதிதாக தொடங்க உள்ளேன். 
 
பயிற்சியாளரான பின்னர் கோலியிடம் நான் இன்னும்  பேசவில்லை. கோலி ஒரு சிறந்த வீரர். அதேபோன்று, தோனி மற்றும் யுவராஜ் சிங் இந்திய அணியின் திறமைவாய்ந்த மூத்த வீரர்கள்.
 
இவர்களின் பங்கு இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று, மேலும் இருவரும் அடுத்த 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலககோப்பை போட்டியிற்கு தேவை. ஆனால் இதை பற்றி மேலும் விவாதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்