பாகிஸ்தான் தோல்வியை காப்பாற்றிய மழை: சோகத்தில் இங்கிலாந்து அணியினர்

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (20:40 IST)
பாகிஸ்தான் தோல்வியை காப்பாற்றிய மழை:
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தற்போது செளதாம்டன் நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது
 
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணி 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது 
 
இதனால் ஃபாலோ ஆன் ஆன பாகிஸ்தான் அணியை மீண்டும் இரண்டாவது இன்னிங்சை விளையாட தொடங்கியது. நான்காவது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாகிஸ்தான் அணி இன்று தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது
 
ஆனால் மழை காரணமாக போட்டியில் தடங்கல் ஏற்பட்டது. மழை மேலும் தொடர்ந்து கொண்டே இருப்பதால் இந்த போட்டி இத்துடன் முடிய வாய்ப்பு இருப்பதாகவும் எனவே போட்டி டிராவில் தான் முடியும் என்றும் கூறப்படுகிறது
 
இங்கிலாந்து அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தபோதிலும் பாகிஸ்தானை மழை காப்பாற்றி விட்டது என்பது ஒருபக்கம் பாகிஸ்தான் அணிகளுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் இங்கிலாந்து அணியினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்