ஃபாலோ ஆன் ஆன பாகிஸ்தான்: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெறுமா?

திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (07:32 IST)
ஃபாலோ ஆன் ஆன பாகிஸ்தான்: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெறுமா?
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் செளதாம்டன் நகரில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. கிராலே 263 ரன்களும் பட்லர் 152 ரன்களும் எடுத்தனர்.
 
இதனை அடுத்து பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் அசார் அலி 141 ரன்களும் முகமது ரிஸ்வான் 53 ரன்களும் எடுத்தனர்.
 
இதனை அடுத்து பாகிஸ்தான் அணி தற்போது 310 ரன்கள் பின்தங்கி இருப்பதால் ஃபாலோ ஆன் ஆகியுள்ளது என்பதும் இதனை அடுத்து மீண்டும் அந்த அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இங்கிலாந்து அணி 310 ரன்களுக்குள் பாகிஸ்தான் அணியை இரண்டாவது இன்னிங்ஸில் சுருட்டி விட்டால், இந்த போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்