தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான கிரேம் ஸ்மித் தான் கேப்டனாக இருந்தபோது கருப்பின வீரர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டினார் என்று சோலகிளே தாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் சமீபகாலமாக கருப்பின வீரர்களுக்கு எதிராக வெள்ளையின வீரர்கள் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழ ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் முன்னாள் கேப்டனான கிரேம் ஸ்மித் தனது காலத்தில் கருப்பின வீரர்களை அணியில் சேர்ப்பதில் பாகுபாடு காட்டினார் என்ற குற்றச்சாட்டை சோலகிளே தாமி தெரிவித்துள்ளார். இவர் பள்ளி கிரிக்கெட்டில் ஸ்மித்துக்கு கேப்டனாக செயல்பட்டவர். அணியில் ரிசர்வ் விக்கெட் கீப்பராக இருந்த இவர் அணியில் கடைசி வரை எடுக்கப்படவே இல்லை.
மார்க் பவுச்சருக்குப் பின் அணியில் இடம் கிடைக்கும் என காத்திருந்த அவர், அதன் பின் டிவில்லியர்ஸ் விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்டதும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் இப்போது உலகெங்கும் கருப்பின மக்களின் வாழ்க்கை பற்றிய பேச்சுகள் எழுந்துள்ள நிலையில் இப்போது ஸ்மித்தின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ஸ்மித் மறுத்துள்ளார்.