இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரே மற்றும் கேப்டன் கோஹ்லி களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் புஜாரே அபார சதமடித்தார். அவர் 294 பந்துகளில் 103 ரன்கள் அடுத்து அபாரமாக விளையாடி வருகிறார். அதேபோல் கேப்டன் விராத் கோஹ்லியும் அரை சதத்தை பூர்த்தி செய்து சதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார். 182 பந்துகளில் 69 ரன்கள் எடுத்துள்ள கோஹ்லி இன்னும் சில நிமிடங்களில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சற்றுமுன் வரை இந்திய அணி 117 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்துள்ளது
நேற்றைய முதல் நாளில் தொடக்க வீரராக களமிறங்கிய மயாங்க் அகர்வால் 76 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.