டெல்லி அணிக்கு பண்ட்டே கேப்டனாக தொடர்வார்… ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (10:26 IST)
எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடக்க உள்ளன.

எல்லா சீசன்களிலும் கடைசி அணியாக வந்து கொண்டிருந்த டெல்லி அணி கடந்த சீசனில் இறுதிப் போட்டிவரை சென்றது. அதற்கு முக்கியக் காரணம் அந்த அணியில் புதிய இளம் வீரர்கள் புகுத்த்தப்பட்டது, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பதவியை ஏற்றதும்தான். அந்த அளவுக்கு சிறப்பாக அணியை வழிநடத்தினார் ஸ்ரேயாஸ்.

இந்நிலையில் இந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து அவர் ஐபிஎல் தொடர் முழுவதும் விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் பீல்டிங்கின் போது காயமடைந்தார். தோள்பட்டையில் எலும்பு இடம் மாறியதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதற்ஜ்கிடையில் பண்ட்டின் தலைமையில் டெல்லி அணியும் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இடம்பிடித்தது. கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டு இப்போது செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடக்க உள்ளன. இந்த மீதமுள்ள போட்டிகளில் காயத்தில் இருந்து மீண்ட ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் கேப்டன் பதவியை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முழு உடல் தகுதியுடன் இருந்தாலும் இன்னும் சில காலம் அவகாசம் தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது. அதனால் எஞ்சிய போட்டிகளிலும் பண்ட்டே கேப்டனாக தொடர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்