ஒரு வழியாக கௌதம் மேனனுக்கு இரக்கம் காட்டிய விக்ரம்… தொடங்கும் துருவ நட்சத்திரம்!

செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (09:40 IST)
நடிகர் விக்ரம் இப்போது மகான் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை நடித்து முடித்துவிட்டார்.

விக்ரம் நடிப்பில் இப்போது மகான், கோப்ரா, பொன்னியின் செலவன் ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. இவை இல்லாமல் துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. இப்போது மகான் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்ததாக கோப்ரா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

அந்த படத்தை முடித்தபின் தனது சிகையலங்காரத்தை மாற்றிவிட்டு, பல ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க உள்ளாராம். இதனால் அடுத்த ஆண்டு விக்ரம் நடிப்பில் நான்கு படங்கள் ரிலிஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்