சச்சினுக்கும், இம்ரான் கானுக்கும் வித்தியாசம் தெரியாதா? – பாகிஸ்தான் உதவியாளரை குதறி எடுத்த நெட்டிசன்ஸ்

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (13:42 IST)
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உதவியாளர் ஒருவர் சச்சின் புகைப்படத்தை இம்ரான்கான் என கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரராக இருந்தவர். வேக பந்து வீச்சாளரான இவர் பங்கேற்ற 1992 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் முதன்முறையாக கோப்பையை வென்றது.

தற்போது பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் தனது பணிகளை தொடர்ந்து வருகிறார். இவரது உதவியாளர்களுள் ஒருவர் நயீம் உல் ஹக். இவர் ட்விட்டரில் “1969ல் இம்ரான் கான்” என்னும் தலைப்பில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். ஆனால் உண்மையில் அந்த புகைப்படத்தில் இருப்பது இம்ரான் கான் அல்ல, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இதை கண்டுபிடித்த நெட்டிசன்கள் “உங்களுக்கு இம்ரான் கானுக்கும் சச்சினுக்கும் வித்தியாசம் தெரியாதா?” என கிண்டலடித்து வருகின்றனர்.

ஆனாலும் இன்னமும் தன்னுடைய ட்விட்டர் கணக்கில் இருந்து அந்த புகைப்படத்தை நயீம் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்