இந்தோனேசியாவில் நிலநடுக்கம்:சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதா?

திங்கள், 24 ஜூன் 2019 (10:41 IST)
இந்தோனேசியாவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பல கட்டடங்கள் ஆட்டம் கண்டன.

இந்தோனேசியா தீவு பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். மேலும் அது பசிபிக் கடற்பகுதியில் அமைந்திருப்பதால், அப்பகுதியிலுள்ள நிலத்தட்டுகள் இயற்கையாகவே மிகவும் பலவீனமான ஒன்றாகும்.

இந்நிலையில், இன்று காலை உள்ளூர் நேரப்படி 11.53 மணீ அளவில், இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியிலுள்ள அம்போன் தீவிற்கு 200 கி.மீ. தெற்கில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆக பதிந்தது. மேலும் இதனை அடுத்து இந்தோனேசியாவின் சவும்லாக்கி பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

சவும்லாக்கி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அள்வு கோளில் 7.3 ஆக பதிந்தது.

இந்த நிலநடுக்கத்தில் எத்தனை பேர் பலியானார்கள், கட்டிடங்களில் சேதம் எந்த அளவு என எந்த தகவல்களும் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டாலும், சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்