சாம்பியன்ஸ் டிராபி.. முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி.. இந்தியாவிடம் தோற்றால் வெளியேறும் அபாயம்..!

Siva

வியாழன், 20 பிப்ரவரி 2025 (07:12 IST)
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. நேற்றைய முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து, இந்தியாவுடன் நடக்கும் போட்டியிலும் தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் வெளியேறும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
 
நேற்றைய போட்டியில், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து, ஐந்து விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான பில் யங் என்பவர் 107 ரன்களும், டாம் லாதம் அதிரடியாக விளையாடி, 118 ரன்கள் அடித்தனர்.
 
321 என்ற கடினமான இலக்கை நோக்கி பாகிஸ்தான் விளையாடிய நிலையில், அந்த அணி 47 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் பாபர் அசாம் 64 ரன்கள் எடுத்தார்.
 
இந்த நிலையில், முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்துள்ளது. இப்போது அந்த அணிக்கு இரண்டே போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும்.
 
மேலும், இந்தியாவுடன் நடக்கும் போட்டியில் தோல்வி அடைந்தால், பாகிஸ்தான் போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்