பாகிஸ்தான் போட்டியில் ஆஃப் ஆன லைட்!: கரண்ட் பில் கட்டலையாம்; கலாய்த்த நெட்டிசன்ஸ்!

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (18:55 IST)
பாகிஸ்தான் – இலங்கை இடையே நடைபெறும் டெஸ்ட் மேட்சில் ஸ்டேடியம் லைட் அடிக்கடி ஆஃப் ஆனதை கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பாகிஸ்தான் – இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் மேட்ச் நேற்று நடைபெற்றது. 10 வருடங்களுக்கு பிறகு கராச்சியில் நடைபெறும் முதல் டெஸ்ட் மேட்ச் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் ஸ்டேடியத்திற்கு படையெடுத்தனர். மேட்ச் நடந்து கொண்டிருந்த போது சுற்றியுள்ள லைட்டுகளில் ஒன்று ஆஃப் ஆனது. ஸ்டேடியத்தின் ஒரு பகுதி இருளில் மூழ்கியது. இதனால் ஆட்டம் பாதியிலேயே தடைப்பட்டது.

25 நிமிடங்கள் கழித்து பிரச்சினை சரிசெய்யப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இது முதல்முறை அல்ல ஏற்கனவே ஒருமுறை லைட் இதுபோல பிரச்சினை செய்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதை ஒழுங்காக கவனிக்கவில்லை. இதனால் பார்வையாளர்கள் கடுமையான கோபத்திற்கு உள்ளானார்கள். பலர் லைட் எரியாததை படம் பிடித்து சமூக வளைதளங்களில் பதிவிட்டு “கராச்சி ஒளியின் நகரம். ஆனால் லைட் மட்டும் எரியாது” என்று கிண்டல் செய்துள்ளனர். மேலும் சிலர் “கரண்ட் பில் கட்டவில்லை போல!” என கிண்டல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்