தீவிரவாதிகளுக்கு முன்னுதாரணம் பாக்., பிரதமர் - காம்பீர் குற்றச்சாட்டு

திங்கள், 30 செப்டம்பர் 2019 (20:11 IST)
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பால்கோட் பகுதில் தீவிரவாதிகள் வெடி குண்டு தாக்குதல் நடத்தியதில் நமது நாட்டைச் சேர்ந்த 40 ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு  இந்தியா, பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியது. இதற்குப் பதிலடியாக காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து பாகிஸ்தான் - இந்தியா இடையே பல்வேறு மனஸ்தாபங்கள் அதிகரித்தன. அதன்பின்னர் விமானப் படை தாக்குதல் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் வி்ழுந்தார். பிரதமர் மோடியால் பல்வேறு நாடுகளின் உந்துதல் மூலம் இந்தியாவுக்கு பத்திரமாக வந்தார் அபிநந்தன்.
 
அதன்பிறகு, காஷ்மீரின் நிலவி வந்த 360 சட்டம் மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை பிரதமர் மோடியின் பாஜக அரசு நீக்கியது. இதற்கு பாகிதான் உலக நாடுகள் மற்றும் ஐநாவிடம் மன்றாடியது. ஆனால் இந்தியாவின் விருப்பம் என கைவிரித்தில் பாகிஸ்தான் பிரதமர் மனம் துவண்டார். அவர்களது எல்லா முயற்சிகளும் தோல்வியைத் தழுவியது.

ஆனால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து டிரோன் மூலமாக ஆயுதங்கள் இந்தியாவுக்குள் வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஏ.ன்.ஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இந்நிலையில் இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீது முன்னாள் கிரிக்கெட்  வீரர் மற்றும் டெல்லி பாரளுமன்ற உறுப்பினர்  காம்பீர் குற்றம்சாட்டியுள்ளார்.
 
அதில், தீவிரவாதிகளின் முன்னுதாரணமாக இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்