உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அபாரமாக விளையாடி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இலங்கை அணி 263 என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. சற்று முன் வரை அந்த அணி நான்கு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்துள்ளது.
நெதர்லாந்து அணியை பொறுத்தவரை ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இலங்கை அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
எனவே இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது