எதிர்பார்த்தது போலவே இமாலய இலக்கு.. பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைக்குமா?
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (17:54 IST)
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 367 ரன்கள் குறித்துள்ளது.
டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் சதம் அடித்து இருந்தாலும் கடைசி இரண்டு ஓவர்களில் மளமளவென நான்கு விக்கெட்டுகள் விழுந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் ஆஸ்திரேலியா பேட்டிங் முடிவடைந்த நிலையில் 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி இன்னும் சில நிமிடங்களில் 368 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது.
இன்றைய போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்