வெண்கலம் வென்ற பிவி சிந்துவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!

திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (06:59 IST)
நேற்று நடைபெற்ற ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பிவி சிந்து அபாரமாக வெற்றி பெற்றார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் ’பிவி சிந்து பெருமைக்குரியவர்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொலைபேசி மூலம் பிவி சிந்துவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
 
அதேபோல் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் ’நாட்டிற்காக மேலும் பல காரணங்களை பிவி சிந்து வெள்ள தனது வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்
 
அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் உள்பட பலரும் பிவி சிந்து வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். பிவி சிந்து பெற்றுக்கொடுத்த வெண்கல பதக்கத்தின் காரணமாக இந்தியா தற்போது இரண்டு பதக்கங்களுடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்