ஒலிம்பிக் பேட்மிண்டன்; வெண்கல சுற்றில் பி.வி.சிந்து!

ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (15:31 IST)
ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் ஆட்டத்தில் தகுதி சுற்றுகளை கடந்துள்ள பி.வி.சிந்து இன்று வெண்கல பதக்கத்திற்கான போட்டியை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்

பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கு கொண்டுள்ள நிலையில் பேட்மிண்டன் ஆட்டத்தில் பி.வி.சிந்து தகுதி சுற்றுகளை கடந்து வெண்கல பதக்கத்திற்கான சுற்றில் நுழைந்துள்ளார். கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்த பி.வி.சிந்து இந்த முறை தங்க பதக்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று மாலை மகளிர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, சீனாவின் ஹி பி ஜியாவுடன் போட்டியிடுகிறார். இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்