ஒரே ஓவரில் 29 ரன்கள்… தெறிக்கவிட்ட 18 வயது மும்பை இந்தியன்ஸ் வீரர்!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (10:01 IST)
நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றாலும் கடைசி வரை போராடி போட்டியை விறுவிறுப்பாக்கியது.

நேற்று நடந்த போட்டியிலும் தோற்று தொடர்ந்து ஐந்தாவது தோல்வியை தழுவியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. அதனால் இந்த சீசனில் அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு மங்கி வருகிறது. நேற்று 199 ரன்களை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் சிறப்பாக விளையாடினாலும் நூலிழையில் வெற்றியைக் கோட்டை விட்டது.

மும்பை இந்தியன்ஸ் இன்னிங்ஸில் அதிகமும் கவர்ந்த வீரராக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டெவால் பிரவிஸின் ஆட்டம் அமைந்தது. ராகுல் சஹார் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து போட்டியின் போக்கையே மாற்றினார். சமீபத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா சார்பாக விளையாடிய இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்க பட்ட அவர் நேற்று 25 பந்துகளில் 49 ரன்களை சேர்த்து அவுட்டானார். அவர் இன்னும் சிறிது நேரம் களத்தில் இருந்திருந்தால் முடிவு வேறு மாதிரியாகக் கூட இருந்திருக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்