தோனி உலகக்கோப்பை வரை ஆட வேண்டும்: சேவாக்

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (17:57 IST)
இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் புதிதாக கிடைத்தாலும் தோனி உலகக்கோப்பை வரை ஆட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

 
கடந்த ஒருவருடமாக இந்திய அணியில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. முன்னாள் கேப்டன் தோனி தனது பழைய ஆட்டத்தை தற்போது வெளிப்படுத்துவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத போது அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுகிறது. தோனி இளம் வீரர்களுக்கு வழிவிட்டு விலக வேண்டும் என்று ஒருசிலர் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியதாவது:-
 
தோனி உலகக்கோப்பை போட்டி வரை ஆட வேண்டும். ரிஷப் பந்த் சிறப்பாக ஆடினாலும், தோனிக்கு 300 ஒருநாள் போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவம் உள்ளது. ஏராளமான போட்டிகளில் தனி நபராக நின்று இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார்.
 
அதனால் தோனி உலகக்கோப்பை போட்டி வரை விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்