'மொக்கை வாங்கிய' கிரிக்கெட் வீரர்...கேலிக்கு ஆளாகும் வாய்ப்பு...?

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (17:43 IST)
ஆஸ்திரேலியா, பாகிஸ்தானுக்கும் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் அபுதாபியில் நடந்து வருகிறது.
இதன் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் பேட்ஸ்மேன் அசார் அலி பவுண்டரி அடித்துவிட்டதாக நினைத்து ஆடுகளத்தில் நின்று கொண்டு சக வீரருடன் பேசிக்கொண்டிருந்தபோது எதிரணியினரால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
 
இது பற்றி அசார் அலி  கூறியதாவது:
 
’4வது விக்கெட்டுக்கு நான் 64 ரன்களுடனும் ,அசாத் 4 ரன்களுடனும் களத்தில் விளையாடிக்கொண்டிருந்தோம். பீட்டர் சிடில் வீசிய பந்தை  நான் சிலிப் திசையில் அடித்தேன்.அது தேர்ட் மேன் திசையில் பவுண்டரிக்கு சென்று கொண்டிருந்தது.
 
அதனால் பந்து பவுண்டரிக்கு சென்றது என நினைத்து ரன் எடுக்காமல் நின்று கொண்டிருந்தேன்.பேட் செது கொண்டிருந்தேன் .எதிரே இருந்த ஆசாத்தும் நானும் பேசிக்கொண்டிருந்தோம்.ஆனால் நான் அடித்த பந்து பவுண்டரிக்கு போகாமல் இடையிலேயே நின்று விட்டது.இதனால் ரன் அவுட் செய்யப்பட்டேன்.
 
இந்த அவுட் செய்த சம்பவம் எனக்கு அம்பயர் விளக்கி தான் எனக்கே தெரியும்.அம்பயர் இது பற்றி  விளக்கியதும் நான் தலையில் அடித்துகொண்டே வெளியேறினேன்.
 
எதிர்காலத்தில் என் மகனின் கேலிக்கு கூட நான் ஆளாக நேரிடும்.’ இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
 
அசார் அலி அடித்த பந்து பவுண்டரிக்கு சென்றது என நினைத்துக்கொண்டு எதிரே நிற்பவருடன் பேசிய போது ரன் அவுட் ஆன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்