ரூ.9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட கொல்கத்தா வீரர் திடீர் விலகல்: தினேஷ் கார்த்திக் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (18:19 IST)
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பியூஸ் சாவ்லா, . கேமரூன் டெல்போர்ட், இஷாங்க் ஜக்கி, மிட்செல் ஜான்சன், குல்தீப் யாதவ், கிறிஸ் லின், கம்லேஷ் நகர்கோட்டி, சுனில் நரைன், நிதிஷ் ராணா, அன்ட்ரே ரஸல், ஜவோன் சீர்லெஸ்,  ஷிவம் மவி, ஷுப்மான் கில், ரிங்கு சிங், மிட்செல் ஸ்டார்க், ராபின் உத்தப்பா, வினய் குமார்,  அப்போர்வ் வான்கடே ஆகியோர் உள்ளனர்.

இந்த நிலையில்  கிரிஸ் லின், அண்ட்ரே ரஸல் ஆகியோர் ஏற்கனவே காயம் காரணமாக அணியில் இருந்து விலகி உள்ள நிலையில் தற்போது இன்னொரு முக்கிய வீரரான மிச்சல் ஸ்டார்க் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். இவர் சமீபத்தில் நடந்த ஏலத்தின்போது 9.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா அணியில் இருந்து மூன்று முக்கிய வீர்ர்கள் விலகியிருப்பதால் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்