நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து 290/8

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (16:13 IST)
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்துள்ளது.
 
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இதனையடுத்து, 2-வது டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் நியூசிலாந்து அணியினர் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வீக்கெட்டுகளை இழந்தனர்.
 
இதனால் அந்த அணி 94 ரன்னுக்கு 5 வீக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் பேர்ஸ்டோவ் சிறப்பாக விளையாடியதால் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக பேர்ஸ்டோவ் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். நியூசிலாந்து அணியில் பவுல்ட் 5 வீக்கெட்டுகளையும், சவுத்தி 3 வீக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்