கோலியை விட தோனியே சிறந்த டி 20 கேப்டன்… மைக்கேல் வாகன் மீண்டும் சர்ச்சை பேச்சு!

Webdunia
சனி, 29 மே 2021 (16:16 IST)
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தோனியே சிறந்த டி 20 கேப்டன் எனக் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் உலகின் சிறந்த கிரிக்கெட்டர் கோலியா வில்லியம்சனா என்ற சர்ச்சையை சில வாரங்களுக்கு முன்னர் கிளப்பிவிட்டார். அதைபோல இப்போது இந்திய அணியின் கேப்டன்கள் மற்றும் கோலி மற்றும் தோனி இடையே ஓப்பீடு செய்துள்ளார்.

அதில் ‘கோலி வேண்டுமானால் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டனாக இருக்கலாம். ஆனால் டி 20 போட்டிகளில் தோனியே சிறந்த கேப்டன். அவர் செய்த மாற்றங்கள் சிறப்பானவை. இங்கிலாந்தில் நடக்க உள்ள தொடரில் இந்தியா மோசமாக தோற்கும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்