அர்ஜெண்டினா அணியின் தொல்வியால் லியோனல் மெஸ்ஸி ரசிகர் ஒருவர் கேரளாவில் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா கிளப் மற்றும் அர்ஜெண்டினா தேசிய கால்பந்து அணிக்காக விளையாடி வருவர். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். ரோலாண்டோ, மெஸ்ஸி இருவருக்கும்தான் கால்பந்து உலகில் ரசிகர்கள் அதிகம். அதுவும் மெஸ்ஸிக்கு சற்று ரசிகர்கள் அதிகம் என்றே கூறலாம்.
கால்பந்து விளையாட்டு பற்றி தெரியாதவர்களுக்கு கூட மெஸ்ஸியை நன்றாக தெரியும். மெஸ்ஸிக்காக கால்பந்து போட்டி பார்க்கும் பார்வையாளர்கள் உண்டு. தற்போது ரஷ்யாவில் உலக கால்பந்து பொட்டி நடைபெற்று வருகிறது.
இதில் அர்ஜெண்டினா அணி கடந்த 21ஆம் தேதி குரோஷியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக அணியின் கேப்டன் மெஸ்ஸி ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.
தென்னிந்தியாவில் கால்பந்து போட்டிகளை அதிகம் விரும்பும் மாநிலம் கேரளா. கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர். கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த டினு அலெக்ஸ்(30) என்பவர் தீவிர மெஸ்ஸி ரசிகர். இவர் அர்ஜெண்டினா தோல்வியால் மனம் உடைந்த ஜூன் 21-ந் தேதி இரவு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அவரது வீட்டு அறையில் சோதனை செய்தபோது அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், இந்த உலகத்தில் இனி நான் காண எதுவும் இல்லை. நான் போகிறேன். என் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை” என்று எழுதியிருந்துள்ளார்.
இதையடுத்து டினு அலெக்ஸின் உடலை கோட்டயம் இல்லிக்கால் ஆற்றுப்பாலத்தின் அருகே போலீசார் இன்று கண்டெடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.