சச்சின், கோஹ்லிக்கு பேட் செய்து கொடுத்தவரின் இன்றைய பரிதாப நிலை

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (19:10 IST)
சச்சின், கோஹ்லிக்கு பேட் செய்து கொடுத்தவரின் இன்றைய பரிதாப நிலை
கிரிக்கெட் விளையாட்டில் சச்சின், விராட் கோலி ஆகியோர் கோடிக்கணக்கில் சம்பாதித்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு பேட் செய்து கொடுத்தவரின் நிலைமை தற்போது மிகவும் பரிதாபகரமாக உள்ளதாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அஷ்ரப் சவுத்ரி என்பவர் பேட் செய்யும் தொழிலில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான சச்சின் டென்டுல்கர், விராத் கோலி உள்பட பலருக்கும் இவர்தான் பேட் செய்து கொடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவு வீரர்களுக்கும் இவர்தான் பேட் செய்து கொடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு வீரர்கள் கேட்கும் வகையில் வித்தியாசமாக பேக் செய்து கொடுப்பதில் இவர் வல்லவர் என்பதால் இவருக்கு பேச் செய்யும் ஆர்டர்கள் குவிந்து வந்தது 
 
இந்த நிலையில் இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் நடக்காததால் இவருக்கு முற்றிலும் வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் உள்ளார். தற்போது இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொருளாதார உதவி தேவைப்படுவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சச்சின், விராட் கோஹ்லி இவருக்கு உதவ வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்