தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

vinoth

ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (09:12 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி இமாலய வெற்றியைப் பெற்றது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடியதை தொடர்ந்து,  103 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்க முடிந்தது.

இந்த இன்னிங்ஸில் தோனி உள்ளிட்ட பல வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்த இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிக எளிதாக பத்தாவது ஓவரிலேயே வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் சி எஸ் கே அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு குறைந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி, சென்னை அணியின் மூத்த வீரர்களான தோனி, மற்றும் அஸ்வின் ஆகியோரின் மூளை வேலை செய்வதை நிறுத்தி விட்டதா எனக் கடுமையாக சாடியுள்ளார். அதில் “சுனில் நரேனுக்கு அஸ்வின் ஓவர் தி ஸ்டம்பில் வீசினார். இதனால் அவர் அஸ்வினை மிக எளிதாக வீழ்த்தினார். ஆனால் வழக்கமாக அவர் அரவுண்ட் த ஸ்டம்ப்பில் வீசிதான் இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்துவார். ஆனால் அந்த நாளில் அஸ்வின் மற்றும் தோனிக்கு இது ஏன் தெரியவில்லை? அவர்கள் மூளை வேலை செய்வதை நிறுத்தி விட்டதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்