ஃபைனலில் கோட்டைவிட்ட இந்திய ஏ அணி.. 128 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் சாம்பியன்..!
திங்கள், 24 ஜூலை 2023 (08:10 IST)
கடந்த சில நாட்களாக ஆண்கள் எமர்ஜிங் கிரிக்கெட் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தது என்பது தெரிந்தது.
இதில் இந்தியா பாகிஸ்தான் இலங்கை வங்கதேசம் நேபால் யுஏஇ உள்ளிட்ட 8 அணிகள் விளையாடியது.
இதில் இந்திய ஏ அணி மற்றும் பாகிஸ்தான் ஏ அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் நேற்று இறுதிப்போட்டியில் இந்தியா பரிதாபமாக தோல்வி அடைந்தது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஏ அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் அடித்தது. தாஹிர் 108 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து 353 என்ற இலக்கை நோக்கி விளையாடி இந்திய அணி 40 ஓவர்களில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 224 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 128 ரன்கள் வித்தியாசத்தில் எமர்ஜிங் கோப்பையை பாகிஸ்தான் ஏ அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது