கடைசி வரை போராடிய மணிஷ் பாண்டே: ஐதராபாத் அணி தோல்வி

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (07:03 IST)
கடைசி வரை போராடிய மணிஷ் பாண்டே: ஐதராபாத் அணி தோல்வி
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய நிலையில் மணிஷ் பாண்டே கடைசி வரை போராடிய நிலையிலும் அவரது ஐதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது 
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரரான ரானா மிக அபாரமாக விளையாடி 80 ரன்கள் அடித்தார். ராகுல் திரிபாதி 53 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 188 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஐதராபாத் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டே கடைசி வரை அவுட் ஆகாமல் 61 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடதக்கது. பெயர்ஸ்டோ 55 ரன்கள் எடுத்திருந்தார். நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக ரானா தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்