கெயிலின் அதிரடிக்கு தடை போட்ட மழை....

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (18:57 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. 
 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய முதல் போட்டியில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. 
 
கிறிஸ் லின் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களான கெயில் மற்றும் ராகுல் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
 
இவர்களது அதிரடியை தடுக்கும் விதமாக மழை குறுக்கிட்டுள்ளது. இதனால், போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போட்டியின் ஓபனிங் வீரர்களாக களமிறங்கிய ராகுல் மற்றும் கெயில் 46 மற்றும் 49 ரன்களை முறையே குவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்