ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய முதல் போட்டியில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது.