எங்க ஜெர்ஸியில கோலி எப்பவும் cutieதான்… RCB வெளியிட்ட புகைப்படம்!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (15:58 IST)
ஆர் சி பி அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கோலி புதிய ஆர்சிபி ஜெர்ஸியில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஐபிஎல் உள்ளிட்ட சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். முதலில் ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்துதான் அவர் விலகினார். அதுபோல அந்த அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதையடுத்து 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு கேப்டனாக தென் ஆப்பிரிக்க வீரர் பாஃப் டு பிளஸ்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்னும் சில நாட்களில் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் ஆர்சிபி அணியோடு இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் கோலி. இந்நிலையில் இந்த ஆண்டு அணியின் ஜெர்ஸி புதிதாக மாற்றப்பட்டுள்ள நிலையில் அந்த உடையோடு கோலி இருக்கும் புகைப்படத்தை ஆர் சி பி அணி நிர்வாகம் பகிர்ந்துள்ளது. மேலும் அந்த புகைப்படத்தோடு ‘எங்கள் ஆர் சி பி ஜெர்ஸியில் கோலி எப்போதும் அழகாக இருப்பார். இந்த ஆண்டும் அதில் மாற்றமில்லை’ எனக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்