இந்திய அணிக்கு அபராதம் … ஏன் தெரியுமா?

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (16:54 IST)
நேற்றைய போட்டியில் தாமதமாக பந்துவீசிய இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதில் இந்திய அணி வீரர்களின் பவுலிங் மிக மோசமாக இருந்ததால் 374 ரன்களை ஆஸ்திரேலியா சேர்த்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 308 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் முதல் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் முதலில் பந்துவீசிய இந்திய அணி அரைமணிநேரம் தாமதமாக பந்துவீசியது. இதையடுத்து பந்துவீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதால், இந்திய வீரர்கள் அனைவருக்கும் போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது. மேலும் இதுகுறித்த விசாரணைக்கு இந்திய கேப்டன் விராட் கோலி நேரடியாக வரவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்