ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. இந்திய அணி அறிவிப்பு.. கேப்டன் இவரா?

செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (07:20 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே செப்டம்பர் 22ஆம் தேதி ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டி தொடங்க உள்ளது. 
 
செப்டம்பர் 22, 24, 27 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான இந்திய அணி சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
வலிமையான ஆஸ்திரேலிய அணியுடன் மோதவிற்கும் இந்திய அணிக்கு கே எல் ராகுல் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  ரோகித் சர்மாவுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு: 
 
 கே.எல். ராகுல் (கேப்டன் - விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், அஷ்வின்,  பும்ரா, முகம்மது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்