மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.
இந்நிலையில் சமீபத்தில் கைதி 2 பற்றி பேசியுள்ள நடிகர் கார்த்தி “கைதி 2 திரைப்படம் கண்டிப்பாக வரும். அதற்கான காலம் வரும்” எனக் கூறியுள்ளார். இப்போது ஜப்பான் படத்தை முடித்துள்ள கார்த்தி, நலன் குமாரசாமி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.