விஜய்யின் 'லியோ' பட கன்னட போஸ்டர் ரிலீஸ்

திங்கள், 18 செப்டம்பர் 2023 (18:05 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ பட  கன்னட போஸ்டர் ரிலீஸாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  மாஸ்டர் படத்திற்குப் பின்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் லியோ.

இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளளது.

இந்நிலையில் லியோ குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி  நேற்று மாலை 6 மணிக்கு லியோ  பட தெலுங்கு போஸ்டர்களை நடிகர் விஜய்யின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது.

இந்த போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. அடுத்த 4  நாட்களில் புதிய போஸ்டர் வெளியாகும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று  நடிகர் விஜய்   மற்றும் லோகேஷ் கனகராஜ் தங்களின் சமூக வலைதள பக்கத்தில்,  லியோ  பட கன்னட  போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இது வைரலாகிவருகிறது.

#LeoKannadaPoster pic.twitter.com/GJIEWrP00Z

— Vijay (@actorvijay) September 18, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்