என் ரசிகன் என் நண்பருக்கு படம் பண்ணுவது எனக்கு பெருமைதானே… தலைவர் 171 படம் பற்றி கமல்!

திங்கள், 18 செப்டம்பர் 2023 (14:22 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சைமா விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த பாடகர் விருதைப் பெற்ற கமல்ஹாசன் பேசும் போது இந்த படம் பற்றி பேசியது கவனிக்க வைத்துள்ளது. அதில் “இங்குள்ள எல்லோருமே எதிர்பார்ப்பது, கமல் ரசிகரான லோகேஷ், ரஜினிகாந்துடன் பண்ணும் படம் பற்றிதான். என் ரசிகன் என் நண்பருக்கு படம் பண்ணுவது எனக்குதானே பெருமை.

அதற்காக பந்துபோடும் போது பேட்டை வைத்துக் கொண்டு ஸ்டம்ப்பை காட்டிக்கொண்டு நிற்க மாட்டேன். அது விளையாட்டு. தொடர்ந்து நாங்கள் போட்டி போட்டு கொண்டுதான் இருப்போம். ஆனால் ஒருவரை ஒருவர் தடுக்கி விட மாட்டோம்.” எனப் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்