மூன்றாவது இடம் யாருக்கு? கொல்கத்தா அணி பவுலிங் செய்ய முடிவு

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (19:42 IST)
மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

 
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்க உள்ளது.
 
நேற்றைய போட்டியில் பெங்களூர் அணியிடம் பஞ்சாப் தோல்வி அடைந்ததன் மூலம் பஞ்சாப் அணி மூன்றாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு சென்றது. இதனால் கொல்கத்தா அணி மூன்றாவது இடத்திலும், ராஜஸ்தான் அணி நான்காவது இடத்திலும் உள்ளன.
 
இரு அணிகள் வெற்றி பெற வேண்ட சூழலில் உள்ளது. நேற்றைய போட்டி மூலம் தற்போது மூன்றாவது இடத்திற்கு போட்டி ஏற்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி மூன்றாவது இடத்தை பிடிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்