இன்று போட்டி நடைபெறும் பிர்மிங்காம் மைதானத்தில், ஜோ ரூட் இங்கிலாந்து அணிக்காக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாகவே அதிக ரன்கள் குவித்த வீரராக உள்ளார். இந்த மைதானத்தில் அவர் 9 டெஸ்ட் போட்டிகள், 16 இன்னிங்ஸ்களில் விளையாடி 70.76 சராசரியுடன் 920 ரன்கள் எடுத்துள்ளார். இதில் மூன்று சதங்களும், ஐந்து அரைசதங்களும் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 142* ஆகும்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று தொடங்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி 3.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் மைதானத்திற்கு ரசிகர்கள் வருகை தந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.