ரஷ்யாவுடன் வர்த்தகம் வைத்து கொண்டால் 500% வரி.. இந்தியாவை மறைமுகமாக மிரட்டிய டிரம்ப்!

Siva

புதன், 2 ஜூலை 2025 (14:07 IST)
ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ளும் நாடுகளுக்கு 500 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட ஒரு மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
 
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 40% ரஷ்யாவிடம் இருந்துதான் இறக்குமதி செய்து வருகிறது. 2024-25 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 68.7 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் அதிக அளவிலான கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்கும், அதுமட்டுமன்றி மற்ற பொருள்களையும் இறக்குமதி செய்வதற்கும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
 
இந்த நிலையில், ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளுக்கு 500 சதவீத சுங்க வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க செனட் சபையில் ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
இந்த மசோதா, இந்தியா உட்பட ஒரு சில குறிப்பிட்ட நாடுகளுக்கு, ரஷ்யாவுடன் எந்த வர்த்தகமும் செய்யக்கூடாது என்ற மறைமுக மிரட்டலாகவே பார்க்கப்படுகிறது. இதனால் உலக அரசியல் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்