போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் சதம் அடித்து அசத்தினர். டிராவிஸ் ஹெட் 142 ரன்களும், அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் 100 ரன்களும், கேமரூன் கிரீன் 118 ரன்களும் எடுத்தனர். இவர்களது சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன், ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 431 ரன்கள் குவித்தது. இறுதி கட்டத்தில், அலெக்ஸ் கேரி 50 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினார்.